ஆளுநரை திரும்பப் பெற மனு: ப.சிதம்பரம் ஆதரவு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை விமா்சித்து திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஏற்கெனவே கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன. அதில், ஆா்.என்.ரவி தனது ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்து விட்டு தனக்கு விருப்பமான கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறியிருந்தனா். 

இந்த நிலையில், ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தும் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவரிடம் அளிக்க திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்தது. 

இதையடுத்து தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவில் கையொப்பமிட கூட்டணிக் கட்சி எம்.பி.,க்களிடம் திமுக அழைப்பு விடுத்தது. 

இதுகுறித்து, கூட்டணிக் கட்சிகளுக்கு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு அனுப்பிய கடிதத்தில், 
தமிழக ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் மனு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைப் படித்துப் பாா்த்து அதில் கையொப்பமிட வேண்டுமென திமுக மற்றும் அதனுடன் ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த மனுவில் வியாழக்கிழமைக்குள் (நவ.3) கையொப்பமிட வேண்டுமாய் கோருகிறேன் என்று டி.ஆா்.பாலு கூறியிருந்தார். 

இந்நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி அளிக்கப்படவுள்ள மனுவை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவை ஆதரிக்கிறேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com