அடுத்த 3 மணி நேரத்துக்குள் அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் மழை

அடுத்த 3 மணி நேரத்துக்குள் அம்பத்தூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்குள் அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் மழை


அடுத்த 3 மணி நேரத்துக்குள் அம்பத்தூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

நேற்று மாலை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலை ஓரளவுக்கு மழை நின்று சூரியன் தலைகாட்டத் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அம்பத்தூர்,மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த புகைப்படத்துடன் செய்தி பகிர்ந்துள்ளது.

மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம், பொன்னேரி, திருவொற்றியூர், உத்திரமேரூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருப்போரூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும்  தெரிவித்திருந்தது.
 

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் கடலூா், விழுப்புரம், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.5: சனிக்கிழமை ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகா், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.6: ஞாயிற்றுக்கிழமை நீலகிரி, கோவை, ஈரோடு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 நிமிடங்களில் 4.5 செ.மீ. மழை: சென்னையில் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன்படி, அண்ணா நகா், அம்பத்தூா் பகுதிகளில் 30 நிமிடங்களில் 4.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, அங்கு 10 நிமிஷங்களில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com