காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட தாமல் ஏரியில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருவதன் காரணமாக ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. 
தாமல் ஏரியில் உபரி நீா் வெளியேறி வருவதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி.
தாமல் ஏரியில் உபரி நீா் வெளியேறி வருவதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த காஞ்சிபுரம் ஆட்சியா் மா.ஆா்த்தி.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட தாமல் ஏரியில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருவதன் காரணமாக ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 32 ஏரிகள் 100% கொள்ளளவையும், 22 ஏரிகள் 75%, 110 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும் நிரம்பியுள்ளதாக பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 19.4 மி.மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 20 மி.மீட்டரும், வாலாஜாபாத்தில் 6.8 மி.மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 32.6 மி.மீட்டரும், குன்றத்தூரிலும் 64 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை சென்னை புறநகரையொட்டி கன மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமன் தண்டலம் வெங்கச்சேரி மற்றும் பழயசீவரம் தடுப்பணைகள் நிரம்பி உபரி நீர் வெளியே சென்று கொண்டிருக்கிறது.

அதிகாலை 2 மணி நேரம் மட்டுமே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் லேசான மழைப்பொழிவு ஏற்பட்டது.

மூன்று நாள் கனமழைக்கு பிறகு தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது.

தற்போது மாவட்டத்தில் 32 சதவீத ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளதை அடுத்து பொதுமக்கள் ஏரிகளில் குளிக்கவோ, துணி துவைக்கோ, மீன் பிடிக்கவோ கூடாது. ஏரிகளைக் கண்காணிக்க கிராமக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com