ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் புறப்பாடு தாமதம்

இன்று ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் புறப்பாடு தாமதம்
ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் புறப்பாடு தாமதம்


இன்று (நவம்பர் 4ஆம் தேதி) ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் 6 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை இயக்கத்தில் இருக்கும் பிரச்னை காரணமாக ராமேஸ்வரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் தாமதமாகப் புறப்படும் என்றும் அதில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக மாலை 4.20  மணிக்குப் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில், நவம்பர் 4ஆம் தேதி ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வழக்கமாகப் புறப்படும் நேரத்தைக் காட்டிலும் 6 மணி நேரம் தாமதமாகப் புறப்படுவதால், இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், அதற்கேற்றாற் போல தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com