
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 25-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 5-வது நாளாக வினாடிக்கு 26,000 கன அடியாக நீடிக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,500 கன அடி வீதம் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், வெள்ள நீர் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் உபரிநீர் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: தினமும் என்னைத் திட்டித் தீர்க்கலாம்; ஆனால் அதற்கு ரூ.662 கட்டணம்: எலான் மஸ்க்
இன்று காலை 25-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.