பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்யும் திட்டம் இல்லை: டாஸ்மாக் நிர்வாகம் உறுதி

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் ஏதுமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் உறுதியாக தெரிவித்துள்ளது. 

மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்யும் திட்டம் ஏதுமில்லை என டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

கண்ணாடிக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவை விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும். 

மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் உறுதியாக தெரிவித்தது. 

இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com