ரயில் முன் தள்ளி மாணவி கொலை: கைதான இளைஞா் மீது குண்டா் சட்டம்

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
ரயில் முன் தள்ளி மாணவி கொலை: கைதான இளைஞா் மீது குண்டா் சட்டம்

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சென்னை அருகே ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவா் மனைவி ராமலட்சுமி. ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிகிறாா்.

இந்தத் தம்பதியின் மூத்த மகள் சத்யா. தியாகராயநகரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்த இவா், பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த அக்.13-ஆம் தேதி மின்சார ரயில் முன் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் தயாளனின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டாா்.

தனது காதலை ஏற்க மறுத்ததால், சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்ததாக சதீஷ் வாக்குமூலம் அளித்தாா். சத்யா கொலை செய்யப்பட்ட துக்கம் தாங்காமல் அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கு ரயில்வே போலீஸாரிடமிருந்து, சிபிசிஐடிக்கு அக்.14-ஆம் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், சிபிசிஐடி அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று சதீஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடா்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com