கோவை கார் வெடிப்பு வழக்கு: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 பேர்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும், இன்று புழல் சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கு: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 பேர்
கோவை கார் வெடிப்பு வழக்கு: புழல் சிறைக்கு மாற்றப்படும் 6 பேர்


கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும், இன்று புழல் சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.

கோவையிலிருந்து அழைத்து வரப்படும் ஆறு பேரும் பூவிருந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு புழல் சிறையில் அடைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர் என தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. 

சென்னையில் இருந்து  தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், ஆணிகள், கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா  (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ்  (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்  (26) ஆகியோரை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஆறாவது நபராக ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் விசாரணையை தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com