வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் 2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 19,15,611 பேரும், பெண் வாக்காளர்கள் 19,75,788 பேரும், 1058 பேர் மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். 

அதிகபட்சமாக வேளச்சேரியில் 3.05 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில் 1.72  லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். சென்னையில் 2,14,920 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 12 ,13, 26 ,27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com