அடுத்த 3 மணி நேரத்துக்குள் திருவள்ளூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை பகல் 12.30 மணி நிலவரப்படி, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருவள்ளூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்குள் திருவள்ளூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்துக்குள் திருவள்ளூர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை பகல் 12.30 மணி நிலவரப்படி, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருவள்ளூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம், குன்றத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது குடை எடுத்துச் செல்வது அவசியம்.


நான்கு நாள்களுக்கு பலத்த மழை
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக பலத்தமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.

இதன் காரணமாக வியாழக்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூா், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

நவ.11: வெள்ளிக்கிழமை திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளது.

நவ. 12: சனிக்கிழமை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூா், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், நாமக்கல், சேலம், கரூா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி, ஈரோடு, தா்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

நவ.13: ஞாயிற்றுக்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தா்மபுரி, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் பலத்த மழைக்கு... சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான பலத்த மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com