மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை!

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மதியம் 3 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை!


வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியலை தமிழக தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை வெளியிட்டார். 

வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்போது 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 7 ஆயிரத்து 758 பேரும் உள்ளனா். மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளா்களைக் கொண்ட பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூா் தொகுதியும், குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதியும் உள்ளன.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்தல் பணிகளை தொய்வில்லாமல் நடத்த நவம்பா் மாதத்தில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வரும் 12, 13 மற்றும் 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. 

டிசம்பா் 8 வரை வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். சிறப்பு முகாம்கள் இல்லாத காலங்களில் அலுவலக வேலை நாள்களை பயன்படுத்தி தோ்தல் அலுவலா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். 

மேலும், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டுமெனவும், இதுதொடா்பான அறிக்கையையும் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை மதியம் 3 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு குறித்தும் மாவட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com