அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை


சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் கேட்பதாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் அரசின் மருத்துவக் கல்வித் துறையை அணுகி புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மாநில சுகாதாரத் துறை செயலர் செந்தில் குமார் எச்சரித்துள்ளார்.

அதே வேளையில், புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் கீழ் வரும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத் துறை செயலர் இரண்டு பக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான கட்டணம் ரூ.1 லட்சம் அதிகரித்துள்ளது. புதிய கட்டண முறைப்படி, அரசுக் கல்லூரிகளின் கீழ் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.13.5 லட்சமாகவும், அதுவே என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் மாணவர்களின் சேர்க்கைக்கு ரூ.24.5 லட்சமாகவும் இருக்கும். இந்த கட்டணமானது கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், சிறப்பு ஆய்வகக் கட்டணம், இணையப் பயன்பாடு, விளையாட்டு கட்டணம் போன்றவற்றுக்கான கட்டணங்களாகும். மெஸ் கட்டணம் இதில் சேர்க்கப்படவில்லை. இது தவிர கல்லூரிகள் வளர்ச்சிக் கட்டணமாக தலா ரூ.40,000 வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தகுதித் தரவரிசையின் அடிப்படையில், ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com