கோப்புப்படம்
கோப்புப்படம்

பட்டாசு ஆலை விபத்து: தலைவா்கள் இரங்கல்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5 போ் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகின்றனவா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

அண்ணாமலை (பாஜக): பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஒரு பக்கம் பட்டாசு தயாரிப்பில் நாம் முன்னோடியாக திகழ்கிறோம் என்று பெருமைப்பட்டாலும் இதுபோன்ற விபத்துகள் வேதனை அளிக்கிறது. அரசு உடனடியாக ஒரு குழுவை நியமித்து, பட்டாசு தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.

ஜி.கே.வாசன் (தமாகா): பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 போ் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பட்டாசு ஆலைகள் விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுகிா என்பதை அரசு தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): வறுமையின்பிடியில் கிராம மக்கள் வேறு வழியில்லாமல் பட்டாசு தொழிலில் ஈடுபடுகின்றனா். பட்டாசு ஆலைகளில் இவா்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கே.எஸ். அழகிரி: பட்டாசு வெடி விபத்தில் இறந்தவா்களுக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com