சீர்காழி பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கடலோர கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது
நாங்கூர் கிராமத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் புகுந்துள்ள வெள்ள நீர். 
நாங்கூர் கிராமத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் புகுந்துள்ள வெள்ள நீர். 

பூம்புகார்: சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கடலோர கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.​

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த மழையின் காரணமாக சீர்காழியில் 43 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட 18 கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் காரணமாக பல்வேறு செல்லனாறு, வெள்ள பள்ளம் உப்பனாறு, கோதை ஆறு உள்ளிட்ட முகத் துவார ஆறுகளின் வழியாக கடல் நீர் உட்புகுந்ததால் சின்ன பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் நீரில் மூழ்கியுள்ளது.

மேலும் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக நாங்கூர், திருநகரி, நெய்த வாசல், வேட்டங்குடி, மாதானம் உள்ளிட்ட பகுதிகளில் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் மீண்டும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com