குழந்தைகள் நாள்: ஒரு நாள் தலைமை ஆசிரியராக உள்ளிக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி!

குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவதையொட்டி, பிளஸ் 1 மாணவி என்.யுவஸ்ரீ, அனைத்து மாணவ, மாணவிகளின் விருப்பப்படி பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்வு பெற்றனர்.
உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாளையொட்டி ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிளஸ் 1 மாணவி என்.யுவஸ்ரீ.
உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாளையொட்டி ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பிளஸ் 1 மாணவி என்.யுவஸ்ரீ.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவதையொட்டி, திங்கள்கிழமை பள்ளி மாணவி ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதுடன். பள்ளி மாணவரை தேசியக் கொடியினை ஏற்ற செய்து கௌரவப்படுத்தப்பட்டனர்.

உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் நாள் விழா நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.பாலாஜி தலைமை வகித்தார்.

இதில், இப் பள்ளி பிளஸ் 2 மாணவர் எஸ்.மித்தேஷ், இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

பின்னர், நேரு குறித்து நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பிளஸ் 1 மாணவி என்.யுவஸ்ரீ, அனைத்து மாணவ, மாணவிகளின் விருப்பப்படி பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்வு பெற்றனர். பின்னர், என். யுவஸ்ரீயை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தனர்.

உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாளையொட்டி தேசியக்கொடியினை ஏற்றும் பிளஸ் 2 மாணவர் எஸ்.மித்தேஷ்.

தலைமை ஆசிரியர் பொறுப்பு மாணவி, ஆசிரியர்களின் பாட குறிப்பு நோட்டில் கையொழுத்திட்டார். தொடர்ந்து, அனைத்து வகுப்புக்கும் சென்று பாடங்கள் நடைபெறுவதை ஆய்வு செய்தார்.

குழந்தைகள் நாளையொட்டி, இப்பள்ளியில் பணியாற்றும் 30 ஆசிரியர்கள் இணைந்து தங்களது சொந்த பணத்தில் 1000 மாணவர்களுக்கு சைவ பிரியாணி, இனிப்பு பொங்கல், முட்டை ஆகியவற்றை ஏற்பாடு செய்து மதிய உணவாக வழங்கினர்.

நிகழ்ச்சியில், உள்ளிக்கோட்டை வர்த்தக சங்க நிர்வாகி மோகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.கயல்விழி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் எம்.சரிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com