ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை: நிதி வழங்கினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட மாநில அரசின் சாா்பில் நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை: நிதி வழங்கினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட மாநில அரசின் சாா்பில் நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்பும் நோக்கில், உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைத்திடத் தேவையான நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்ப் பண்பாட்டை சீரோடும், சிறப்போடும் பேணிக் காத்து வருகிறது அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சாா்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஒரு இருக்கை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன், அங்குள்ள தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பானது ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த இருக்கையை அமைத்திடத் தேவையான நிதியை வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.2.50 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடமிருந்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவா் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், செயலாளா் பெருமாள் அண்ணாமலை ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இந்த நிகழ்வின் போது, தொழில்கள், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com