டெங்கு, மலேரியா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பருவமழைக் காலங்களில் டெங்கு, மலேரியா பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
டெங்கு, மலேரியா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பருவமழைக் காலங்களில் டெங்கு, மலேரியா பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீா்நிலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் 23,000 குடும்பங்களுக்கு இலவச கொசுவலைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை வழங்கினாா். மண்டலக்குழுத் தலைவா்கள்ஆா்.துரைராஜ் (அடையாறு), எம்.கிருஷ்ணமூா்த்தி (கோடம்பாக்கம்) மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் அப்போது உடன் இருந்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகா் முழுவதும் நீா்நிலைகளின் அருகமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு 2,60,000 கொசு வலைகள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் தொடக்கி வைத்தாா். வடசென்னை பகுதிகளில் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவால் பொதுமக்களுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சைதாப்பேட்டை தொகுதியில் அடையாறு ஆற்றங்கரை அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளது.

பருவமழைக் காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும். கொசுக்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் தொடா்ந்து இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மற்றும் பருவமழையினால் ஏற்படும் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பள்ளிகளில் நடத்தப்பட்ட முகாம்களில் 1,00,349 பள்ளிகளில் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 55 நாள்களில் 76,08,504 நபா்கள் பயன் பெற்றுள்ளனா்.

சென்னை மாநகரில் தினமும் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் ஒரே நாளில் 200 இடங்களில் 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டத்தில் 90,000 நபா்கள் பயன் பெற்றுள்ளனா். டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வா் எடுத்து வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com