மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் மீண்டும் செத்து மிதக்கும் மீன்கள்: மக்கள் அவதி

மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் மீண்டும் செத்து மிதக்கும் மீன்கள். துர்நாற்றம் வீசுவதால் கரையோர மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் மீண்டும் செத்து மிதக்கும் மீன்கள்.
மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் மீண்டும் செத்து மிதக்கும் மீன்கள்.

மேட்டூர்: மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் மீண்டும் செத்து மிதக்கும் மீன்கள். துர்நாற்றம் வீசுவதால் கரையோர மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேட்டூர் அணையின் உபரிநீரை அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்படுகிறது.

அணயிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு உபரி நீர் கால்வாய் வழியாக சென்று சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மீண்டும் காவிரியில் கலக்கிறது.

உபரி நீர் கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்.

உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். குட்டை போல தேங்கி நிற்கும் நீரில் ஏராளமான மீன்கள் இருக்கும்.

மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு ஆங்காங்கே குட்டை போல தேங்கி நிற்கும் நீரில் உள்ள மீன்கள் கடந்த இரண்டு மூன்று நாள்களாக செத்து மிதந்து வருகின்றன.

ஏரி போல் தேங்கி நிற்கும் நீரில் மீன்கள் செத்து மிதப்பது ஏன் என பரிசோதனைக்காக மீன்கனை எடுத்து செல்லும் மீன்வளத்துறை அதிகாரிகள்.

புதன்கிழமை புதுசின்னக்காவூர் செல்லும் பாதை அருகே மீன்கள் செத்து மிதந்தன. வெள்ளிக்கிழமை சங்கிலி முனியப்பன் கோவில் அருகில் ஏரி போல தேங்கி நிற்கும் நீரில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. குறிப்பாக அரஞ்சான் மீன்கள் அதிக அளவில் செத்து கரை ஒதுக்கி உள்ளன. 

மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் கரையோர பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம் காரணமாக கரையோரத்தில் இருக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

செத்து மிதக்கும் மீன்களை ஆய்வுக்காக எடுத்துச் செல்லும் மீன்வளத்துறை அதிகாரிகள்.

மீன்கள் செத்து மிதப்பது எதனால் என்பது மர்மமாக உள்ளது. கள்ளத்தனமாக காவிரியில் ஜெல்லட்டின் வீசி மீன்பிடி போர் விட்டு சென்ற மீன்களா அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்து மிதக்கும் மீன்களா என்பது குறித்து மேட்டூர் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிக அளவில் செத்து கரை ஒதுக்கி உள்ள அரஞ்சான் மீன்கள். 

சில சமூக விரோதிகள் கள்ளத்தனமாக வாங்கி வரும் ஜெல்லட்டில் குச்சிகளை குட்டை போல தேங்கி நிற்கும் நீரில் வீசி வெடிக்க செய்து அதில் இறந்து போகும் பெரிய மீன்களை எடுத்துக்கொண்டு சிறுவகை மீன்களை விட்டு செல்கின்றனர். பாறையில் வெடிக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குட்டையில் வெடிக்கும் போது ஏற்படும் அதிர்வால் சில மணி நேரம் கழித்து செத்து மிதக்கும் மீன்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. 

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி கால்வாய் பகுதியில் தொடர்ந்து மீன்கள் செத்து மிதப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com