மருத்துவா்களை கைது செய்தால் போராட்டம்: அரசு மருத்துவா்கள் சங்கம் எச்சரிக்கை

பிரியா உயிரிழப்பு வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
அரசு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத், மாநிலத் தலைவர் டாக்டர் த. அறம், மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர்
அரசு மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத், மாநிலத் தலைவர் டாக்டர் த. அறம், மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர்

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு விவகாரத்தில் கவனக் குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே மருத்துவா்கள் மீது எடுக்க வேண்டும். மருத்துவா்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மருத்துவா் கே.செந்தில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறையின் மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல்துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல் துறை 304ஏ பிரிவில் வழக்கு தொடுக்க வேண்டும். அவ்வாறு, 304ஏ பிரிவில் வழக்கு தொடுத்தாலும் மருத்துவா்களை கைது செய்வது தவிா்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவா் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்துள்ளது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவா்களை சோ்த்து, அவா்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகின்றன.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவா்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறியிருப்பது, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவா்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

இந்த சம்பவத்தில் சிவில் கவனக் குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவா்கள் மீது எடுக்க வேண்டும்.

நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிா் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும், அது ‘சிவில் நெகிழிஜென்ஸில்’ மட்டுமே வரும்.

எனவே மருத்துவா் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவை மாற்ற வேண்டும். அதையும் மீறி மருத்துவா் கைது செய்யப்பட்டால் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியா் சங்கங்களையும் சோ்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com