டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வு இன்று(சனிக்கிழமை) தொடங்கியது. 
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வு தொடங்கியது!

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வு இன்று(சனிக்கிழமை) தொடங்கியது. 

தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 போ் விண்ணப்பித்திருந்தனா்.

குரூப் 1 தோ்வு மூன்று படிநிலைகளைக் கொண்டது. முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்முகம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில், முதல்நிலைத் தோ்வு இன்று(நவ. 19) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

தோ்வுக்காக 38 மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தத் தோ்வுக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com