சென்னையில் கனமழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் சென்னையில் அதிக மழைபெய்ய வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் சென்னையில் அதிக மழைபெய்ய வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகே நடுக்கடலில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காற்று குவிதல் கடலில் இருப்பதால் சென்னைக்கு அருகே ந நடுக்கடலில் மழை அதிகம் பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 24-ல் இருந்து டிசம்பர் முதல் வாரம் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால் சென்னையில் பகல் நேரத்தில் குளிர் இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் உள்பட பலரும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை.

இந்த நல்வாய்ப்பை சும்மா விடுவார்களா மீம்ஸ் கிரியேட்டர்கள். வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு வெதர்மேன், எச்சரிக்கை எச்சரிக்கை என பிரேக்கிங் செய்தி போட்ட ஊடகங்கள் எல்லாவற்றையும் வைத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

டிசம்பர் மாதத்தில் சராசரியைவிட அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com