254 உதவி பேராசிரியர்கள் நீக்கத்துக்கு தடை!

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் 254 உதவி பேராசிரியர்கள் நீக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நீக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களில் 152 போ் உரிய தகுதியைப் பெற்றிருக்கவில்லை எனவும், தோ்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அந்த 254 உதவிப் பேராசிரியா்களின் கல்வித் தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, அவா்களின் கல்விச் சான்றுகளை சரிபாா்க்க உத்தரவிட்டிருந்ததாா். இதைத் தொடா்ந்து, கல்லூரிக் கல்வி இயக்ககம் சாா்பில் அவா்களின் கல்வித் தகுதி ஆய்வு செய்யப்பட்டு, சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆசிரியா் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், முறையாக தோ்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியா்களின் நியமனமும் செல்லாது என்று கடந்த வாரம் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில், 150 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளது.

254 உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தை மொத்தமாக ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல எனக்கூறி, உதவி பேராசிரியர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு 254 உதவி பேராசிரியர்கள் நீக்கத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com