பெண்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை: மு.க. ஸ்டாலின்

பட்டம் பெற்று கல்லூரியிலிருந்து தான் விடைபெறுகிறீர்கள். கற்பதிலிருந்து விடைபெறுவதில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராணி மேரி கல்லூரி 104வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் உரை
ராணி மேரி கல்லூரி 104வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் உரை

சென்னை: பட்டம் பெற்று கல்லூரியிலிருந்து தான் விடைபெறுகிறீர்கள். கற்பதிலிருந்து விடைபெறுவதில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, பட்டங்களைப் பெறுபவர்கள், பாடங்களைக் கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும். இராணி மேரி கல்லூரியினுடைய 104 -ஆவது பட்டமளிப்பு விழா இது.
இராணி மேரி கல்லூரி என்பது இந்த பெயரைப் போலவே கம்பீரமான,
பாரம்பரியமான கௌரவத்தைக் கொண்டிருக்கக்கூடிய கல்லூரி இந்தக்
கல்லூரி.  இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்றும், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது ராணி மேரி கல்லூரி.

இந்தக் கல்லூரிக்கு முன்னால், கடற்கரைப் பகுதியில் கலங்கரை விளக்கு
இருக்கிறது. இது பெண்கல்வியின் கலங்கரை விளக்காக இந்த இராணி மேரி
கல்லூரி ஒளிவீசிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துவது போல்
அமைந்திருக்கிறது.

பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக
முக்கியமான நாள். அதிலும் முதல் பட்டம் சிறப்பானது. முதல் தலைமுறையாகப்
பட்டம் பெறுவது அதனைக் காட்டிலும் பரவசமானது. உணர்ச்சிபூர்வமான
மனநிலையில்தான் இன்று பட்டம் பெற்ற நீங்கள் ஒவ்வொருவருமே
இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய கண்களிலும் பல எதிர்காலக்
கனவுகள் மின்னிக்கொண்டு இருக்கின்றன. உங்களது பட்டங்கள் உங்களை
இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.

மேலும், பெண்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com