5,290 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் 5,290 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி செய்தாா்.
5,290 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் 5,290 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி செய்தாா்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாகப் பெருக்கமடைகின்றன.

நிகழாண்டைப் பொருத்தவரை ஜனவரி முதல் தற்போது வரை 5,290 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். பருவமழையால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன.

கடந்த 15-ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் 55 போ் பாதிக்கப்பட்டனா். அவை, படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது தினசரி சராசரியாக 20 போ் என்ற அளவில் பாதிப்புகள் உள்ளன. பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி அங்கு மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com