இறகுப்பந்து விளையாடிய முதல்வர்! கொளத்தூரில் புதிய விளையாட்டு அரங்கு திறப்பு

சென்னை கொளத்தூரில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியருடன் விளையாடினார். 
இறகுப்பந்து விளையாடிய முதல்வர்! கொளத்தூரில் புதிய விளையாட்டு அரங்கு திறப்பு

சென்னை கொளத்தூரில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியருடன் விளையாடினார். 

சென்னை கொளத்தூர் தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ. 1.27 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து மாணவ, மாணவியருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 

பின்னர் புதிய விளையாட்டரங்கில் மாணவ, மாணவியருடன் இறகுப்பந்து விளையாடினார். 

மேலும் சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ. 8.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 37 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

கொளத்தூர் பந்தர் கார்டனில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ 4.37 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்புப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 

அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா, சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com