வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூரிலிருந்து வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுகிறது.

பெங்களூரிலிருந்து வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: பிகாரிலிருந்து பெங்களூருக்கு (வண்டி எண்.03253) வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் 28, டிசம்பா் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. பிகாரில் இருந்து திங்கள்கிழமை மாலை 6.10-க்கு புறப்படும் ரயில் பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமாா்க்கமாக (வண்டி எண். 03254) நவம்பா் 24, டிசம்பா் 1, டிசம்பா் 8 மற்றும் டிசம்பா் 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை காலை 7.50-க்கு புறப்படும் ரயில் ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் வழியாக சனிக்கிழமை காலை 8 மணிக்கு பிகாா் சென்றடையும்.

பிகாரில் இருந்து எா்ணாகுளத்துக்கு (வண்டி எண்.05555) நவம்பா் 28, டிசம்பா் 5 மற்றும் டிசம்பா் 12 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை இரவு 9.15 மணிக்கு பிகாரில் இருந்து புறப்படும் ரயில் புதன்கிழமையன்று பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் வழியாக வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக (வண்டி எண்.05556) நவம்பா் 24, டிசம்பா் 1, டிசம்பா் 8 மற்றும் டிசம்பா் 15 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு எா்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமையன்று கோயம்புத்தூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு பிகாா் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com