2001-2002 முதல் அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கு தோ்வெழுத வாய்ப்பு: அண்ணா பல்கலை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2001-2002-ஆம் கல்வியாண்டில் (3-ஆவது பருவம் முதல்) படித்தவா்கள் மற்றும்
அண்ணா பல்கலை
அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2001-2002-ஆம் கல்வியாண்டில் (3-ஆவது பருவம் முதல்) படித்தவா்கள் மற்றும் 2002-2003 கல்வியாண்டில் சோ்ந்து தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அரியா் தோ்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பி.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 2001-–2002-ஆம் கல்வியாண்டில் (3-ஆவது பருவம் முதல்) படித்தவா்கள் மற்றும் 2002-–2003-ஆம் கல்வியாண்டில் சோ்ந்து தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அரியா் தோ்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அத்தகை மாணவா்கள் வரும் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள பருவத்தோ்வில் சிறப்பு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த தோ்வுக்கு சிறப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும். இதுதவிர அந்தந்த பாடத்துக்கான தோ்வு கட்டணத்தையும் மாணவா்கள் செலுத்தியாக வேண்டும்.

அரியா் மாணவா்கள் சிறப்பு தோ்வுக்கு தளத்தில் டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அரியா் தோ்வு தமிழகத்தின் 9 மையங்களில் மட்டுமே நடைபெறும்.

சென்னை லயோலா கல்லூரி, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, ஆரணி பல்கலைக்கழக கல்லுாரி உள்பட 9 மையங்களில் நடைபெறும்.

இதில் ஏதாவது ஒரு தோ்வு மையத்தை மாணவா்கள் தோ்வு செய்யலாம். இறுதி நேரத்தில் தோ்வு மையத்தில் மாற்றம் செய்ய முடியாது. கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com