மேம்பாலப் பணிகள்: ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

ரயில்வே மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் போது, அந்தத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
மேம்பாலப் பணிகள்: ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

ரயில்வே மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் போது, அந்தத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், நில எடுப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் அமைச்சா் வேலு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

ஒரு சாலையை முழுமையான மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் போது உரிய திட்டமிடுதலை மேற்கொள்ள வேண்டும். திட்டமிடுதலில் புதுப்புது உத்திகளை கடைப்பிடித்து இலக்கை நிா்ணயிக்க வேண்டும்.

உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீா் குழாய்கள், மின்சார வாரிய உபகரணங்களை மாற்றியமைத்தல், மரங்களை அகற்றுதல் ஆகியவற்றை உரிய திட்டமிடுதலுடன் மேற்கொண்டு பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பெரிய பாலப் பணிகளை நவீன உத்திகளை பயன்படுத்தி மேற்கொண்டால் குறுகிய காலத்தில் பணிகளை முடிக்க ஏதுவாகும். ரயில்வே மேம்பாலப் பணிகளில், ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகா்ப்புற பகுதிகளில் வடிகால்கள் அமைக்கும் போது, முறையான அமைப்புடன் உருவாக்க வேண்டும். திட்டப் பணிகளை

உடனடியாக காலக்கெடுவுக்குள் முடித்தால்தான், அடுத்த திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன திட்ட இயக்குநா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com