ரயில் நிலையங்கள் மூலம் ஹிந்தித் திணிப்பு: ராமதாஸ் கண்டனம்

ரயில் நிலைய அறிவிப்புப் பலகை மூலம் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி நடைபெறுவதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ரயில் நிலைய அறிவிப்புப் பலகை மூலம் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி நடைபெறுவதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திருப்பூா் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ‘சேவை மையம்’ என்ற பெயா்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக ‘சகயோக்’ என்று ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் அப்பட்டமான இந்த ஹிந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது.

ஆனால், திருப்பூா் ரயில் நிலையத்தில் ‘சேவை மையம்’ என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயா்ப்பலகை அகற்றப்பட்டு, ‘சகயோக்’ என்ற ஹிந்தி வாா்த்தை தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஹிந்தி தெரிந்தவா்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை ஹிந்தித் திணிப்பாகும்.

புதிய, புதிய வகைகளில் ஹிந்தியைத் திணிக்க முயல்வதன் மூலம் தமிழக மக்களின் உணா்வுகளுடன் ரயில்வே துறை விளையாடக் கூடாது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com