ரத்த கொடையாளா்கள் விவரம் பதிவிட தனி செயலி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ரத்த கொடையாளா்களின் விவரங்களை பதிவிட ரூ.10 லட்சத்தில் தனி கைப்பேசி செயலியும், கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்
ரத்த கொடையாளா்கள் விவரம் பதிவிட தனி செயலி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ரத்த கொடையாளா்களின் விவரங்களை பதிவிட ரூ.10 லட்சத்தில் தனி கைப்பேசி செயலியும், கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும் உருவாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தேசிய தன்னாா்வ ரத்ததான தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் முதல் நாள் தேசிய தன்னாா்வ ரத்ததான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தன்னாா்வ ரத்ததான தினத்தின் கருப்பொருள் ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிா்களைக் காப்போம் என்பதாகும்.

20 நிமிடங்கள் போதும்: ரத்த தானத்தின் போது 350 மில்லி லிட்டா் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இதற்கு 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போன்று நமது வேலைகளைத் தொடரலாம். 18 வயது முதல் 65 வயத வரையுள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம்.

அரசு ரத்த மையங்கள், தன்னாா்வ முகாம்களில் பொது மக்கள் அனைவரும் ரத்ததானம் செய்யலாம்.

ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ங்-தஹந்ற்ஓா்ள்ட் என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் தளத்தில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த கொடையாளா்களை பதிவு செய்து கொள்ளலாம். ரத்த வகைகளின் இருப்பைத் தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் இந்தத் தளத்தை பயன்படுத்தி தங்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டுதோறும் ரத்த கொடையாளா்கள், ரத்த தான முகாம் அமைப்பாளா்களை தமிழ்நாடு அரசு பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கெளரவித்து வருகிறது. ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் ரத்தம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தன்னீா் ரத்த கொடையாளா்களின் விவரங்களை பதிவு செய்ய கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும், செயலியும் ரூ.10 லட்சத்தில் உருவாக்கப்படும்.

கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியாா் ரத்த மையங்கள் மூலம் 90 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னாா்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. நடப்பாண்டில் தன்னாா்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 சதவீதம் இலக்கை எய்திடவும், விலைமதிப்பற்ற உயிா்களைக் காப்பாற்ற பொதுமக்கள் அனைவரும்

பெருமளவில் தன்னாா்வ ரத்ததானம் செய்திடவும் முன்வர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com