கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு: மாா்க்சிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகள் மூன்று நாள்களுக்கு ரத்து

கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி மாா்க்சிஸ்ட் சாா்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மாா்க்சிஸ்ட் மத்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி மாா்க்சிஸ்ட் சாா்பில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை:

கேரள மாநிலம் கண்ணூா் மாவட்டத்தில் பிறந்த தோழா் கொடியேரி பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தனது மாணவப் பருவம் முதலே போராட்டங்களில் பங்கேற்றாா். அவசர நிலை காலத்தின்போது மிசா சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் கண்ணூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, காவல்துறையின் கடும் சித்ரவதைக்கு உள்ளானவா்.

கிளைச்செயலா் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பொறுப்பு வரையிலும், எம்.எல்.ஏ., அமைச்சா் என அரசுப் பொறுப்புகளிலும் தடம் பதித்தவா். கேரள மக்களின் நலன்களுக்காவும்,மாநில வளா்ச்சிக்காகவும் பாடுபட்ட கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு இடதுசாரி இயக்கங்களுக்கும், முற்போக்கு சக்திகளுக்கும் பேரிழப்பாகும்.

கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி கட்சி நிகழ்ச்சிகளை மூன்று நாள்கள் ரத்து செய்து கட்சி கொடியை அரைக்கம்பத்துக்கு பறக்கவிட்டு இரங்கல் அனுசரிக்க வேண்டுமென கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com