மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை! கோவையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

கோவையில் தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்து படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.
மைல்கல்லுக்கு படையலிட்டு பூஜை! கோவையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

கோவையில் தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்து படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் பழைய மைல்கல் சேதம் அடைந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய மைல்கல் வைக்கப்பட்டு இருந்தது.

சிறுவாணிக்கு 20 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள மைல்கல்லுக்கும், முக்காளி என்ற இடத்திற்கு 45 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்ட கல்லுக்கும்  ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த மைல்கற்களுக்கு இருபுறமும் வாழைக்கன்று வைத்து, மாவிலையால் தோரணம் கட்டி, மாலையிட்டு, பொட்டு வைத்து படையல் வைத்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

இது மைல்கற்களை கொண்டாடுவதாக அல்லாமல், தங்கள் ஊரை நேசிக்கும் மக்கள், அதன் பெயருக்கு செய்யும் கொண்டாட்டம் என்று கோவை மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com