
முதல்வர் மு.க.ஸ்டாலினை கனிமொழி எம்.பி. இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று(அக்.5) அறிவிப்பு வெளியிட்டது. மக்களவை உறுப்பினர்கள் 17 பேரையும், மாநிலங்களை 10 பேரையும் மத்திய அரசு நியமனம் செய்தது,
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: கலிஃபோர்னியாவில் இந்தியர்கள் படுகொலை: ஏடிஎம்-ல் பணம் எடுத்த குற்றவாளி
முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதற்காக வாழ்த்துப் பெற்றார்.