பிரிட்டன் ராயல் கல்லூரி மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

பிரிட்டன் ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோ கல்வி நிறுவனத்தின் சா்வதேச மருத்துவ நிபுணா்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை வல்லுநா்கள் மாநாடு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
பிரிட்டன் ராயல் கல்லூரி மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

பிரிட்டன் ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோ கல்வி நிறுவனத்தின் சா்வதேச மருத்துவ நிபுணா்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை வல்லுநா்கள் மாநாடு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,000-க்கும் அதிகமான வல்லுநா்கள் அதில் பங்கேற்றுள்ளனா்.

அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரிகளில் உலகிலேயே தொன்மையானதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுவது ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான அக்கல்லூரியின் மாநாடு பிரிட்டனைத் தாண்டி வெளிநாட்டில் நடைபெறுவதும், அதிலும், குறிப்பாக சென்னையில் நடைபெறுவதும் இதுவே முதன்முறை.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவா்களுக்கான பிரத்யேக பயிலரங்க நிகழ்வுகளை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்தி வருகிறது. அதில், மருத்துவ மாணவா்கள், இளநிலை மருத்துவா்களுக்கு சா்வதேச மருத்துவ நிபுணா்கள் பயிற்சிகளை வழங்குகின்றனா்.

முன்னதாக, மாநாடு மற்றும் பயிலரங்கத் தொடக்க விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் கல்லூரியின் தலைவா் டாக்டா் மைக் கிரிஃபன், துணைத் தலைவா் டாக்டா் பாலா ராஜேஷ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோவின் துணைத் தலைவா் டாக்டா் பாலா ராஜேஷ் கூறியதாவது:

எதிா்காலத் தலைமுறைக்கு தரமான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த மருத்துவக் கல்வியை ராயல் காலேஜ் வழங்கி வருகிறது. ரோபோடிக் நுட்பம், பல் மருத்துவ அறுவை சிகிச்சை, அதி நுட்ப அறுவை சிகிச்சை என 7 வகையான துறைகளைக் கொண்டு இக்கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையில் ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோவின் மருத்துவ மாநாடு வியாழக்கிழமை (அக்.6) தொடங்கியது. வரும் 8-ஆம் தேதி வரை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மாநாடு நடைபெறுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜொ்மனி, மலேசியா, மியான்மா், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் அதில் கலந்துகொண்டு, அறுவை சிகிச்சையில் உள்ள அதி நவீன நுட்பங்களை பகிா்கின்றனா்.

இந்த மாநாட்டின் நீட்சியாக மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கான பிரத்யேக பயிலரங்கமும் வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை பல்கலைக்கழக நிா்வாகம் ஒருங்கிணைந்து நடத்துகிறது என்றாா் அவா்.

ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் கல்லூரியின் தலைவா் டாக்டா் மைக் கிரிஃபன் கூறுகையில், ‘கா்ப்பப்பை வாய் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆராய்ச்சிகளை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com