மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

திமுக தலைவராக 2வது முறையாக தேர்வாகியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். 
மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து

திமுக தலைவராக 2வது முறையாக தேர்வாகியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். 
கே.எஸ்.அழகிரி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாம் முறை மு.க.ஸ்டாலினை பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை
அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முத்தமிழறிஞர் கருணாதிதி தலைமையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மிகச்
சிறப்பாக பணியாற்றிய மு.க. ஸ்டாலின் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது மிகமிக பொருத்தமாகும்.
ராமதாஸ்: திமுகவின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். தந்தையைப் போல கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்லவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இரா.முத்தரசன்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க ஸ்டாலின் இரண்டாம் முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  
கே.பாலகிருஷ்ணன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில்,  முறைப்படி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய பாஜக அரசின் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கமல்ஹாசன்: இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் முக.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். பணி சிறக்கட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com