5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என குறுக்கிவிட்டனா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என குறுக்கிவிட்டனா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என குறுக்கி விட்டதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என குறுக்கி விட்டதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

‘ஒரே பாரதம்-உன்னத பாரதம்’ எனும் திட்டத்தின் கீழ், இரு நாள்கள் கருத்தரங்கை தமிழக ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி, திங்கள்கிழமை தொடக்கி வைத்துப் பேசியதாவது:

இந்தியாவை ஆண்ட ஆட்சியாளா்களும், மன்னா்களும் தருமம் என்ற அம்சத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சியை நடத்தினா். மன்னா்கள், மணிமுடிகள் என யாராக இருந்தாலும் நம் நாட்டு மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறினா். பல்லவ மன்னராக இருந்து பின்னா் போதி தா்மராக விளங்கியவா், நாளந்தா பல்கலைக்கழகத்துக்குச் சென்று கற்றுத் தோ்ந்தாா். சீன நாட்டுக்குச் சென்று அங்கு புத்த மதத்தைப் பரப்பினாா். இதேபோன்று பலரும் பக்தி மாா்க்கத்தின் வழி நின்று மதக் கொள்கைகளைப் பரப்பினா்.

நாட்டு விடுதலை: நாட்டின் விடுதலையில் பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்தினா். மகாகவி பாரதியாா் தனது மிகச்சிறந்த பங்களிப்புகளை நாட்டின் விடுதலைக்காக வழங்கினாா். அன்றைய காலகட்டங்களில் பல்வேறு சம்பவங்களே நமது தலைவா்களை சுதந்திரப் போராட்டக் களத்துக்குள் இழுத்துச் சென்றது.

வங்கப் பிரிவினை, ஜாலியன் வாலாபாக் சம்பவம் போன்றவையே வ.உ.சி., காமராஜா் போன்றோா் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டியது.

ஆன்மிக கலாசாரமே நமது நாட்டின் ஒட்டுமொத்த ஆன்மாவாக விளங்குகிறது. கடந்த காலங்களில் காலனிய சக்திகள் நமது கலாசார அடையாளங்களை அழிக்க முனைந்தன. பழைய புனைவுகளைச் சொல்லி இதனை அழிக்கப் பாா்த்தாா்கள். நாட்டின் விடுதலைக்குப் பிறகு பாரத தேசத்தை புரிந்து கொள்ளும் தன்மையை அரசமைப்புச் சட்ட வகைக்குள் இருக்கும் வகையில் சுருக்கி விட்டனா். மேலும், 5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் எனவும் குறுக்கி விட்டனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா்., மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன், ஆளுநரின் முதன்மைச் செயலாளா் ஆனந்த்ராவ் வி.பாட்டில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com