தம்மம்பட்டியில் கனமழை: இடி தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து கருகியது!

தம்மம்பட்டி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. மின்சாதனப் பொருள்களும் பழுதடைந்தது.
தம்மம்பட்டி சுவேத நதியில் இன்று காலை இரு கரைகளில் புரண்டோடிய செந்நீர்.
தம்மம்பட்டி சுவேத நதியில் இன்று காலை இரு கரைகளில் புரண்டோடிய செந்நீர்.

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. மின்சாதனப் பொருள்களும் பழுதடைந்தது.

தம்மம்பட்டி பகுதியில் இரு நாள்களாக தொடர்மழை பெய்துவருகிறது. அதனால், தம்மம்பட்டி சுவேத நதியில் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது. இந்நிலையில், நேற்று மாலை, தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி கிராமத்தில் பலத்த இடி தாக்கியதில் பெரியசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கருகியது. 

இடியால், அப்பகுதியில் சில வீடுகளில் இருந்த மின்சாதனப் பொருள்களும் பழுதடைந்தன. தொடர்ந்து, தம்மம்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதனால், அனைத்து ஓடைகளிலும் மழைநீர் செல்கிறது. பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com