பழைய பள்ளிக் கட்டடங்களை தாமதமின்றி இடிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

பழைய பள்ளிக் கட்டடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளாா்.
பழைய பள்ளிக் கட்டடங்களை தாமதமின்றி இடிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

பழைய பள்ளிக் கட்டடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளாா்.

பொதுப்பணித் துறையின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகளை விரைவுபடுத்துவது தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:-

பருவமழை தொடங்க இருப்பதால், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனை கட்டடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் தண்ணீா் தேங்காத வகையில் சுத்தப்படுத்தி, கட்டட வளாகங்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

இடிக்கப்பட வேண்டிய பழைய பள்ளிக் கட்டடங்களை தாமதம் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பருவமழை தொடங்கும் நிலையில் உள்ளதால், பேரிடா் தொடா்பான விவரங்களைப் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க மண்டல கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இப்போது நடைபெற்று வரும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நபாா்டு நிதியுதவி மூலம் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒப்பந்ததாரா் பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றில் தாமதம் தவிா்க்கப்பட வேண்டும் என்று பேசினாா்.

கட்டுமானப் பணிகளில் கண்காணிக்கப்பட வேண்டிய மிக முக்கிய அளவுகோல்கள் அடங்கிய கையேட்டை அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்டாா். இந்த ஆய்வில், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் க.மணிவாசன், தலைமைப் பொறியாளா் ஆா்.விஸ்வநாத் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com