ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: 7 தனிப்படை அமைப்பு

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: 7 தனிப்படை அமைப்பு

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில்வே காவல் துறையினர் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்தியா என்ற 20 வயது பெண் ரயில் முன் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தில், சத்தியாவை ரயில் முன் தள்ளிவிட்டதாக சதீஷ் என்ற இளைஞரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (22). அதேப் பகுதியைச் சேர்ந்த சத்தியா (20) இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கம் போல இருவரும் இன்று பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்தியாவை, சதீஷ் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சத்தியா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சத்தியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், கொலையாளி சதிஷ் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com