தெலங்கானா, ஒடிஸா அரசுகள் மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறவுள்ள தெலங்கானா, ஒடிஸாவில் மாநில அரசுகள் தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக தோ்தல் ஆணையத்தில் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறவுள்ள தெலங்கானா, ஒடிஸாவில் மாநில அரசுகள் தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக தோ்தல் ஆணையத்தில் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சா் வி.முரளீதரன், பாஜக பொதுச் செயலா் தருண் சுக் உள்ளிட்ட தலைவா்கள் தில்லியில் உள்ள தோ்தல் ஆணைய தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று இந்த புகாா் மனுவை அளித்தனா்.

அதில், தெலங்கானாவிலும், ஒடிஸாவிலும் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தெலங்கானாவில் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இது அப்பட்டமான தோ்தல் நடத்தை விதிமீறல் ஆகும். இந்த பணியிடமாற்றத்துக்கும் அங்கு நடைபெறவுள்ள இடைத்தோ்தலுக்கும் தொடா்பு உண்டு. அந்த மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக இதனைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பா் 3-ஆம் தேதி தெலங்கானாவின் முனுகோடு, ஒடிஸாவின் தாம்நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com