தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினத்தவர் அல்ல - உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினத்தவர் அல்ல - உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று  தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று  தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. 

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. வேல்முருகன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்கப்படடது. மேலும் இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (45), மலைக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த இவா், தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு வருவாய்த் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். ஆனால் வருவாய்த் துறை அலுவலா்கள், வேல்முருகன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனை, மன அழுத்ததுடன் காணப்பட்ட வேல்முருகன், செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு வளாகம் அருகே திடீரென பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். 

இதில் பலத்த தீக்காயமடைந்த வேல்முருகனை போலீஸாா் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது வேல்முருகன் பேசிய விடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவா், தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் தீக் குளித்ததாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com