அரக்கோணம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நிகழ்மாத சம்பளத்தை இதுவரை தராததை கண்டித்து அரக்கோணம் நகராட்சி ஓப்பந்த பணியாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 
அரக்கோணம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

அரக்கோணம்: நிகழ்மாத சம்பளத்தை இதுவரை தராததை கண்டித்து அரக்கோணம் நகராட்சி ஓப்பந்த பணியாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியார் ஓப்பந்த நிறுவனத்திடம் ஓப்படைக்கப்பட்டு அந்நிறுவனத்தினர் 174 பணியாளர்களை பணியில் அமர்த்தி நகராட்சியின் 36 வார்டுகளிலும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் நிகழ்மாத சம்பளத்தை இதுநாள் வரை தரவில்லை என்றும், மாதந்தோறும் 20 ஆம் தேதிக்கு பிறகு தான் சம்பளம் தருவதாகவும், விடுமுறை நாட்களிலும் பணிபுரிய சொல்வதாகவும், அப்பணிக்கு தனி ஊதியம் தரமறுப்பதாகவும் கூறி ஓப்பந்த நிறுவனத்தை கண்டித்து நகராட்சி ஓப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். 

ஊழியர்கள் மா. கம்யூனிஸ்ட் கோட்ட செயலர் ஏ.பி.எம்.சீனிவாசன்,  நகரமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் சுகாதார அலுவலர் மோகன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

இதனால் நகரில் திங்கள்கிழமை குப்பைகள் அள்ளப்படாத நிலையும், தெருக்கள் சுத்தம் செய்யப்படாத நிலையும் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com