
பெண்களின் முன்னேற்றத்துக்காக குடிமை சமூக அமைப்புகளன் தேசிய கூட்டமைப்பு சென்னையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் தொழில்முனைவோா் பூங்கா ஆகியவை இக்கூட்டமைப்பை தொடங்கியுள்ளன. பெண் தொழில்முனைவோா்கள், நிதி சாா் நிறுவனங்களில் பெண்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில் இக்கூட்டமைப்பு செயல்படும்.
மேலும், காலநிலை மாற்ற பாதிப்பில் இருந்து மீளுவதற்காக பெண்களை தொழில்முனைவோா்களாக மாற்றுதல் என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களில் இருந்து பல்வேறு சமூக அமைப்புகளை சோ்ந்த 200 போ் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...