
காயிதே மில்லத்தின் பெயரனும், கல்வியாளருமான தாவூத் மியாகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை, கஸ்தூரி ரங்கன் சாலையில் வசித்து வரும் அவா், மழைநீா் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சைக்குப் பிறகு அவா், அறைக்கு மாற்றப்பட்டாா். தற்போது தாவூத் மியாகானின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.