கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: 3வது நாளாக படுகை கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் 3-ஆவது நாளாக படுகை கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ள அமைச்சர் மெய்யநாதன் ளார். 
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ள அமைச்சர் மெய்யநாதன் ளார். 


சீா்காழி: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் 3-ஆவது நாளாக படுகை கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கொள்ளிடம் ஆற்று திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. புதன்கிழமை வரை 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில் வியாழக்கிழமை 1.30 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்ட நிலையிலும் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் கடலுக்கு செல்லும் தன்மை குறைந்துள்ளது. இதனால்  கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு, மேலவாடி உள்ளிட்ட 5 படுகை கிராமங்களில் வெள்ள நீர் மூன்றாவது நாளாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கிராமத்தின் மேடான பகுதி மக்கள் அத்யாசே தேவைகளுக்கு படகுகள் மூலம் வெளியே சென்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் மெய்யநாதன் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து அவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால்  கரையோர கிராமங்களிலும் ஆற்றில் உள்ள அமைந்துள்ள திட்டு கிராமங்களிலும் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளோம். பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீண்ட நாள் கோரிக்கையான புயல் பாதுகாப்பு மையம் இரண்டு இடங்களில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்று இடம் கேட்டுள்ள மக்களுக்கு அது குறித்து ஆய்வு செய்து உரிய மாற்று இடம் வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com