மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பயணிப்பவர் மீதும் வழக்கு:  புதிய போக்குவரத்து விதி அமல்!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் புதிய போக்குவரத்து விதி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. 
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பயணிப்பவர் மீதும் வழக்கு:  புதிய போக்குவரத்து விதி அமல்!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்ற  புதிய போக்குவரத்து விதி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. 

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து இறப்புகள் தமிழ்நாட்டில் தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 1026 பேர் இறந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்ற  புதிய போக்குவரத்து விதி வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது: 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய போக்குவரத்து விதி வியாழக்கிழமை(அக்.20) முதல் அமலுக்கு வந்துள்ளது. 

வாகன ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்போர் இருவரிடமும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். 

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மது அருந்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.1 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்படும்.

இந்த புதிய விதி ஆட்டோ, கார்களில் உடன் பயணிப்போருக்கும்  பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com