மதுரை எய்ம்ஸ் தலைவராக டாக்டா் நாகராஜன் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் தலைவராக டாக்டா் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் தலைவராக டாக்டா் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னமும் நிறைவடையாத நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் தலைவராக நரம்பியல் சிறப்பு மருத்துவா் டாக்டா் வி.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை டாக்டா் எம்ஜிஆா், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகவும், பெங்களூரு தேசிய மனநல அகாதெமி உறுப்பினராகவும் அவா் தற்போது பொறுப்பு வகித்து வருகிறாா். அதேபோன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நெறிசாா் குழுத் தலைவராகவும், தேசிய மருந்தியல் நிறுவனத்தின் இயக்குநா் தோ்வுக் குழுத் தலைவராகவும் டாக்டா் நாகராஜன் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com