சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி முகாம்!

நாள்தோறும் நிகழ்ச்சி, செய்தியாளர்கள் சந்திப்பு என வழக்கமாக கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறை கட்சி நிகழ்ச்சிகள், செய்தியாளர்கள் சந்திப்புகள் எதுவும் இல்லாமல் சொந்த ஊரில் முகாமிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சேலம்: சேலம் மாவட்டத்திற்கு வந்தால் நாள்தோறும் நிகழ்ச்சி, செய்தியாளர்கள் சந்திப்பு என வழக்கமாக கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறை கட்சி நிகழ்ச்சிகள், செய்தியாளர்கள் சந்திப்புகள் எதுவும் இல்லாமல் சொந்த ஊரில் முகாமிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து சேலம் வந்தார்.

நெடுஞ்சாலை நகரில் தங்கியிருந்த அவரை கட்சி நிர்வாகிகள், தொண் டர்கள் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 3 நாள்கள் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் 13 பேர் இறந்தனர். இதுகுறித்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக ஆட்சி எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் அரைமணி நேரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அவ்வாறு சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்; அவ்வாறு நிரூபிக்க முடியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி விலகுவாரா என்ற கேள்வியை ஓபிஎஸ் எழுப்பினார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக, சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபடுவார் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வந்தால் நாள்தோறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமாக இருக்கும். ஆனால், இந்த முறை கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர்க சந்திப்புகள் எதுவும் இல்லாமல் சொந்த ஊரில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com