மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தொலைதூர மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் "நட்புடன் உங்களோடு மனநல சேவை" என்ற தொலைபேசி வழி மனநல சேவை திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

தொலைதூர மனநல ஆலோசனை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது.   மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசுபவர்களுக்கு,  மனநலம் ஆற்றுபடுத்தும் சேவைகள், மனநல ஆலோசர்களுடன் விடியோ ஆலோசனைகள், தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டுமுறைகள் வழங்கப்படும்.

ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டுருக்கிறது. 

"நட்புடன் உங்களோடு மனநல சேவை" என்ற திட்டத்தில் 2 மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுபடுத்துனர்கள் மனநல ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள்.

விக்னேஷ்சிவன் - நயந்தாரா வாடகைத் தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை. மருத்துமனை உரிய ஆவணங்களை மறைத்துள்ளது. அதற்கு அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com