8 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய வளாகங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு புதிய வளாகங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு புதிய வளாகங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்கள் அமைவதுடன், ராமநாதபுரம், திருப்பத்தூரில் உழவா் சந்தை வளாகங்களும் கட்டப்படவுள்ளன.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், சேலம், தருமபுரி, கோயம்புத்தூா், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,

நாகப்பட்டினம், திருவாரூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வழியாக பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

கூடுதல் வசதிகள்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வளாகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், தென்காசி, பெரம்பலூா், வேலூா், திருப்பூா், ராணிப்பேட்டை, அரியலூா் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கான வளாகங்கள் கட்டப்படவுள்ளன. இதேபோன்று, திருப்பத்தூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உழவா் சந்தைகளுக்கான வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. புதிதாக கட்டப்படவுள்ள வளாகங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.6.35 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com